கண் போனதினால் தெரியவில்லை
மனிதர்களைக் கேட்டேன் - மறந்து
போய்விட்டது என்றார்கள் -பறவைகளைக்
கேட்டேன் - இரவு வரட்டும் என்றது .
நண்பனின் வேலி போட்ட நிலம் இரண்டரை
கோடியாமே ?
துணி துவைக்கும் அழகு பெண் விலை மகளாமே ?
தோழர் இந்திய தத்துவம் பற்றி பேசிக்கொண்டு இருக்க
சிட்டுக் குருவிக்கு எதற்கு மூட்டை அரிசி ?
சிந்தனையில் டீக் கடை நாயை மிதிக்க அது
கடித்து வைத்தது .